என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் டி.வி ஷோரூம் குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
    X

    கடலூரில் டி.வி ஷோரூம் குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

    கடலூர் புதுப்பாளையத்தில் டி.வி ஷோரூம் கடையின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.
    கடலூர் :

    கடலூர் புதுப்பாளையத்தில் டி.வி ஷோரூம் கடையின் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவியது.

    இதில் குடோனில் உள்ள ஏ.சி, டி.வி, பீரோ, உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கடலூர் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது.

    மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது.

    இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டுள்ளது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×