என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரத்தில் கார் மோதி கண்டக்டர் பலி
    X

    தாம்பரத்தில் கார் மோதி கண்டக்டர் பலி

    தாம்பரத்தில் ரோட்டை கடக்க முயன்ற பஸ் கண்டக்டர், கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தாம்பரம்:

    சோழிங்கநல்லூர் அடுத்த ஒக்கியம் துரைபாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜா. மாநகர அரசு பஸ் கண்டக்டர். இன்று அதிகாலை வேலை முடிந்து ராஜா தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ரோட்டை கடந்து சென்றார்.

    அப்போது பல்லாவரம் நோக்கி வந்த கார் மோதியதில் ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் முத்துராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×