என் மலர்

  செய்திகள்

  கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்தது - கிராம மக்கள் வரவேற்பு
  X

  கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்தது - கிராம மக்கள் வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என கிராம மக்கள் கூறினர்.
  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரியை நம்பி பூசாரிப்பட்டி, காட்டி நாயனப்பள்ளி, பர்கூர், போகனப்பள்ளி, கம்பம் பள்ளி, ஓரப்பம் உள்ளிட்ட 150 கிராமங்களுக்கு விவசாயம் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது.

  இந்த நிலையில் போதிய மழை பொய்த்து போனதாலும், ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதால் ஏரிக்கு வரும் தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டதால் பெரிய ஏரி கடந்த 15 ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்தது. இதனால் இந்த பெரிய ஏரியை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

  தற்போது கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மலை பெய்து வருவதினால் மார்க்கேண்டேயன் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதினால் சூளகிரி, பண்டப்பள்ளி, திப்பனப்பள்ளி, மதிமடுகு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளது. ஆனால் பெரிய ஏரிக்கு மட்டும் தண்ணீர் வராததால் பூசாரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் இணைந்து மாரசந்திரம் கிளை வாய்க்கால் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் பணியில் கடந்த பல நாள்களாக ஈடுப்பட்டு வந்தனர்.

  இதன் பயனாக நேற்று மார்க்கேண்டேயன் ஆற்றில் இருந்து கிளை வாய்க்கால் மூலமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய ஏரிக்கு மேல்கரடிகுறி, காமராஜர் நகர் வழியாக தண்ணீர் வந்ததையடுத்து கிராம மக்கள் புது தண்ணீருக்கு மலர் தூவி வரவேற்றனர்.

  கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வறண்ட நிலையில் காணப்பட்ட இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் ஒன்றிணைந்து கால்வாய்களை சரி செய்ததின் பயனாக நேற்று முதல் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என கிராம மக்கள் கூறினர்.
  Next Story
  ×