என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    100 நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    விக்கிரமங்கலம் அருகே 100 நாள் திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்ரீபுரந்தான் பகுதியில் வேலை நடைபெற்று வந்தது. இந்த ஊரில் பொதுமக்களுக்கு 100 நாள் வேலையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு தரப்பினருக்கு வேலை அதிகமாகவும், மற்றொரு தரப்பினருக்கு வேலை குறைவாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை குறைவாக வழங்கப்பட்ட ஒரு தரப்பினர் ஸ்ரீபுரந்தான்-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், விக்கிரமங்கலம் போலீசார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இனி இதுபோல் தவறு நடக்காமல் முறையாக வேலை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் ஸ்ரீபுரந்தான்- அரியலூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×