என் மலர்
செய்திகள்

சிங்கம்புணரி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை மும்முரம்: அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்
சிங்கம்புணரி பகுதியில் குட்கா விற்பனையை அதிகாரிகள் மற்றும் போலீசாரும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் கடைக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனை தடுப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.
மொத்த கடைக்காரர்கள் கள்ளத்தனமாக குட்கா புகையிலையை மறைவான இடத்தில் பதுக்கி வைத்து விற்கிறார்கள். தற்போது ரூ. 10-க்கு விற்ற பாக்கெட் 3 மடங்கு அதிகம் வைத்து 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கட்டுமான வேலை பார்க்கும் கூலி தொழிலாளி கண்ணன் கூறுகையில், குட்கா புகையிலையை என்னைப் போன்ற கூலி தொழிலாளர்கள் தான் வாங்கி பயன்படுத்துகிறோம்.
நான் 3 ஆண்டுக்கு முன் வாங்கும் போது 3 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தினேன். ஆனால் இன்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள் என்றார்.
சிங்கம்புணரி பகுதியில் குட்கா விற்பனையை அதிகாரிகள் மற்றும் போலீசாரும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் கடைக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனை தடுப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதால் குட்கா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Next Story