search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டாறில் 5 மில்லிமீட்டர் மழை பதிவு
    X

    குண்டாறில் 5 மில்லிமீட்டர் மழை பதிவு

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று குண்டாறு அணையில் மட்டும் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 62.20 அடியாக இருந்தது.

    இன்று இந்த அணை மேலும் ஒரு அடி உயர்ந்து 63.40 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 561 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 704 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல நேற்று 73.49 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1.64 அடி உயர்ந்து இன்று 75.13 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 706 கன அடி தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 32.34 அடியாக உள்ளது. நேற்று 55.70 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று 56.30 அடியாகவும், 66 அடியாக இருந்த ராமநதி அணை நீர்மட்டம் 66.25 அடியாகவும், 33.79 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் 34.45 அடியாகவும் உயர்ந்துள்ளன.

    நேற்று அணைப்பகுதியில் குண்டாறு அணையில் மட்டும் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற‌ இடங்களில் மழை இல்லை. மழை பெய்யாவிட்டாலும் அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இன்று மழை பெய்தால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×