என் மலர்

  செய்திகள்

  செவ்வாப்பேட்டையில் பலத்த மழை: போலீஸ் நிலையத்தில் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது
  X

  செவ்வாப்பேட்டையில் பலத்த மழை: போலீஸ் நிலையத்தில் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செவ்வாப்பேட்டை பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டியது. இந்த மழையில் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தின் சுற்றுச் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

  செவ்வாப்பேட்டை:

  திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டியது. இந்த மழையில் செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தின் சுற்றுச் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

  மேலும் போலீஸ் நிலையத்தின் சுவர்களில் தண்ணீர் ஊறி உள்ளதால் சேதம் அடைந்து இருந்தது. நேற்று பெய்த மழையால் அறையின் மேலே இருந்த சீலிங் பெயர்ந்து கீழே விழுந்தது. சுற்றுச் சுவர் மற்றும் சீலிங் இடிந்து விழுந்த சமயத்தில் போலீசார் யாரும் அங்கு நிற்கவில்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மணவாளன்நகர், திருவாலங்காடு போலீஸ் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகின்றன.

  செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் விரைவில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×