என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே மக்கள் நீதிமன்ற பொறுப்பாளர் டெங்கு காய்ச்சலுக்கு பலி
காரைக்குடி அருகே டெங்கு காய்ச்சலில் பாதிப்படைந்த மக்கள் நீதிமன்ற பொறுப்பாளர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பர்மா காலனி அசோக் நகரைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது43). சவுதி அரேபியாவில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 18-ந் தேதி காரைக்குடி வந்த முருகேசனுக்கு 24-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்றார். அங்கு காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சோதனையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு பலியான முருகேசனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
காரைக்குடி பகுதியில் 40-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story