என் மலர்

    செய்திகள்

    மதுரையில் 8 வயது சிறுமி கடத்தல் - தந்தை புகார்
    X

    மதுரையில் 8 வயது சிறுமி கடத்தல் - தந்தை புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரையில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் வீரபத்திரன் (வயது40). இவர் கடந்த 2009-ம் ஆண்டில் மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக அவரது மகள் கோபிகா (8) தாத்தா மூக்கையா பராமரிப்பில் இருந்தார்.

    அதன் பிறகு அவளை வீரபத்திரனின் சகோதரி பாக்கியம் அழைத்து சென்று விட்டார். சிறையில் இருந்து வெளிவந்த வீரபத்திரன் தனது மகளை சகோதரி பாக்கியம் கடத்தி சென்று விட்டதாக கரிமேடு போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் கோபிகாவை அவரது தந்தை வீரபத்திரனிடம் பாக்கியம் ஒப்படைத்து விட்டார். தற்போது மீண்டும் கோபிகா கடத்தப்பட்டதாக கரிமேடு போலீசில் வீரபத்திரன் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×