search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
    X

    நாமக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

    நாமக்கல் மாவட்டத்தில் விநாயர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் காவேரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல்லில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைக்க காவேரி ஆற்றிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 25-ந்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் கொல்லிமலை என்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட பூஜை செய்யப்பட் வழிபாடு நடத்தப்பட்டது.

    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணிகளில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் படி நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், பரமத்தி வேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள காவேரி ஆற்றில் கரைக்கப்ப வேண்டும் என்ற மாவட்ட காவல் துறையின் உத்தரவை அடுத்து அப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கொல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அரப்பளிஸ்வரர் கோவில் அருகே உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் நகர் மற்றும் அதனை சுற்றி வைக்கப்பட்டிருந்து விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழுங்க இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஆர்.எஸ்.எஸ் மாநில நிர்வாகி ஹரிஹரகோபால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வேன் மற்றும் லாரிகளில் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தெரு, சேந்தமங்கலம் சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதகளில் வழியாக வந்து கரூர் சாலையை அடைந்தது.

    தொடர்ந்து பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் கரைக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட காவல் துறையின் சார்பில் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் இளமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×