என் மலர்

  செய்திகள்

  எங்கள் கோரிக்கைகளை ஏற்பதில் முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்?: செம்மலை எம்.எல்.ஏ.கேள்வி
  X

  எங்கள் கோரிக்கைகளை ஏற்பதில் முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்?: செம்மலை எம்.எல்.ஏ.கேள்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சியில் நல்ல எண்ணத்தோடு முதல்வர் எடப்பாடி இருந்தால், எங்கள் கோரிக்கைகளை ஏற்பதில் தயக்கம் காட்டுவது ஏன்? என மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை கேள்வியெழுப்பியுள்ளார்.
  சேலம்:

  அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியின் மூத்த நிர்வாகியும், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான செம்மலையிடம் இன்று மாலைமலர் நிருபர் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு-

  கேள்வி:-அ.தி.மு.க. இரு அணிகளும் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அதனால் ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே?

  பதில்:- மக்கள் பிரச்சனையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

  ஆனால் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதியில் சுதந்திர தின அணி வகுப்பு அலங்கார ஊர்தி வேலைப்பாடுகள், மாணவ-மாணவிகள் பயிற்சி உள்பட சுதந்திர தின விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

  இந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சுதந்திர தின விழா பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்றும் போராட்டத்தை வேறு தேதியில் வைத்து கொள்ள முடியுமா? என்றும் போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர்.


  அதனை எங்கள் அணி தலைவர் ஒ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தோம். அவரும் அதனை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு 10ந் தேதி நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்து 18-ந் தேதி நடத்தி கொள்ளலாம் என்று கூறினார். மற்ற படி இணைப்பு பேச்சு வார்த்தைக்காக போராட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை.

  கேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று கூறியுள்ளாரே?


  பதில்:- எடப்பாடி பழனிசாமியின் சமீப கால நடவடிக்கைகள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதற்கான முயற்சியில் மறைமுகமாக இறங்கி இருப்பது போல தெரிகிறது. ஆட்சி, கட்சியின் நலன் கருதி அதனை வெளிப்படையாக அறிவித்து செய்யலாமே.

  சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்குவது, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை என்ற 2 கோரிக்கைகளை எதிர் அணியினர் ஏற்று கொண்டு நிறைவேற்றினால் நாங்கள் அமர்ந்து பேசி இணைப்புக்கான நல்ல சூழ்நிலையை உருவாக்க தயாராக இருக்கிறோம்.

  இணைப்பு முயற்சியில் முதல்வர் நல்ல எண்ணத்தோடு இருந்தால் எங்கள் கோரிக்கையை ஏற்பதில் என்ன தயக்கம். ஆனால் தற்போது வரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

  கேள்வி:- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் தீபா அணியும் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்துவதாக கூறப்படுகிறதே?

  பதில்:- மத்திய அரசு பொது மனிதன் என்ற நிலையில் இருந்து அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும், தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி வந்து விடக்கூடாது என்றும் அதனை செய்யலாம்.

  கேள்வி:- தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுவதாக கூறப்படுகிறதே?

  பதில்:- அரசுக்கு நெருக்கடி கொடுக்கவோ, அரசை கவிழ்ப்பதோ ? எங்கள் நோக்கம் அல்ல, அரசை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

  அரசு மெத்தனமாக இருக்க கூடாது. மக்கள் பிரச்சனைகளில் தீவிர கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்திலே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×