என் மலர்

  செய்திகள்

  தொட்டியத்தில் லாரி மோதி விவசாயி பலி
  X

  தொட்டியத்தில் லாரி மோதி விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொட்டியத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி கால் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
  தொட்டியம்:

  திருச்சி மாவட்டம் தொட்டியம் எடத்தெரு அணியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணையன்( வயது 65) விவசாயி. இவர் நேற்று மாலை தொட்டியம் கடைவீதியில் பொருட்கள் வாங்கிவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கார் ஸ்டாண்ட அருகில் சென்ற போது  தூத்துக்குடியில் இருந்து குஜராத் நோக்கி பெயிண்ட் தூள்கள் ஏற்றி சென்ற லாரி மோதியதில் கண்ணையன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி கால் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

  தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் தொட்டியம் காவல் நிலையத்தில் கண்ணையனின் மனைவி யசோதா கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் வடுகபட்டியை சேர்ந்த மணி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×