என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும், ஆய்வக வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், விபத்துக்களை தடுக்க கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி வந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

Next Story