search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டல்கள் முதல் மளிகைபொருட்கள் வரை ஜி.எஸ்.டி வரி இல்லாமலே பொருட்கள் விலை உயர்வு
    X

    ஓட்டல்கள் முதல் மளிகைபொருட்கள் வரை ஜி.எஸ்.டி வரி இல்லாமலே பொருட்கள் விலை உயர்வு

    ஜி.எஸ்.டி வரி இல்லாமலே பொருள்கள் விலையை உயர்த்தியதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலை உயராது என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    ஆனால் அதற்கு நேர் மாறாக அத்தியாவசிய பொருட்களின் விலை நேற்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக ஓட்டல்களில் உணவு பொருள்கள் விலை அதிகரித்து உள்ளது. மத்திய அரசு ஓட்டல்களை தரம் வாரியாக வகைப்படுத்தி வரி விதித்துள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாக வரியை காட்டிலும் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது.

    ரூ. 80 சாப்பாடுக்கு ரூ. 100 ஆகவும், ரூ. 100 சாப்பாடுக்கு ரூ. 120 ஆகவும் வசூலிக்கிறார்கள். இது போல் 2 இட்லி ரூ. 45-ல் இருந்து ரூ. 55 ஆகவும், தோசை ரூ. 60-ல் இருந்து ரூ. 65-க்கும், பூரி ரூ. 70-ல் இருந்து ரூ. 75-க்கும் பொங்கல் ரூ. 70-ல் இருந்து ரூ. 75-க்கும் விற்கப்படுகிறது.

    இதில் ரூ. 80 சாப்பாடு என்பது ஏற்கனவே வாட்வரி, சேவைவரி உள்ளடக்கியது. தற்போது இதை ரத்து செய்து விட்டுதான் ஒட்டு மொத்தமாக ஜி.எஸ்.டி. யாக விதிக்கப்பட்டுள்ளது. எனவே வாட்வரி, சேவை வரியுள்ளது எனவே வாட் வரி, சேவைவரியை கழித்து விட்டுத்தான் ஜி.எஸ்.டிக்கு மாற வேண்டும். ஆனால் ஏற்கனவே இருக்கும வாட், சேவை வரியுடன் தற்போது ஜி.எஸ்.டி யையும் சேர்த்து வசூலிக்கிறார்கள்.

    பில் இல்லாமல் கோழிக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பில் இல்லாமல் விற்பனையாகும் எந்த பொருளும் வரி விதிப்புக்குள் வராது. ஆனால் பில் இல்லாமலேயே விற்பனை செய்கிறார்கள்.

    இதே போல் சில்லரை விலையில் விற்கப்படும் மளிகை பொருட்கள் விலை கடைக்கு கடை பெறுபடுகிற. சில இடங்களில் பழைய விலைக்கே பொருள்கள் விற்கப்பட்டாலும்.

    பல இடங்களில் விலை உயர்ந்துள்ளது. வியாபாரிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் இந்த குளறுபடி நிலவுகிறது.

    ஜி.எஸ்.டி என்றால் அது பழைய வரியை நீக்கிவிட்டு புதிதாக விதிக்கப்படும் வரி. ஆனால் இது ஏற்கனவே உள்ள வரியுடன் கூடுதல் வரி என்ற கருத்து நிலவுகிறது. மேலும் இது வரை வரி விதிப்புக்குள் வராமல் இருந்த ஏராளமான பொருள்கள் புதிதாக வரி விதிப்புக்குள் வருவதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×