என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழை பெண்கள் தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
    X

    ஏழை பெண்கள் தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

    ஏழை பெண்கள் தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு)தனேசகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு)தனேசகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக நலத்துறையின் சார்பில் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் வருமாறு:-

    வருமானச் சான்று ரூ.72000-க்குள் (வட்டாட்சியரிடம் பெறவேண்டும்), இருப்பிடச்சான்று (வட்டாட்சியரிடம் பெறவேண்டும் அல்லது ரேசன் கார்டு), தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது) (6 மாத கால பயிற்சி), வயது சான்று (20 வயது முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று, சாதிச்சான்று, கடவுச்சீட்டு, மனுதாரரின் கலர் புகைப்படம்-2, விதவை, கணவனால் கைவிடப் பட்டோர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை. ஆகிய ஆவண ங்களுடன் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், தரைத்தளம், அறைஎண் 20, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 15.7.2017-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×