என் மலர்

  செய்திகள்

  வாணியம்பாடியில் தந்தையை வெட்டி கொல்ல முயன்ற மகன்
  X

  வாணியம்பாடியில் தந்தையை வெட்டி கொல்ல முயன்ற மகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாணியம்பாடியில் தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற மகன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  வாணியம்பாடி:

  வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 58). இவரது மகன் புருஷோத்தமன் (24). கட்டிட தொழில் செய்து வந்தனர். மகன் புருஷோத்தமனுக்கு ஜெகநாதன் பைக் வாங்கி கொடுத்தார். இந்த நிலையில், தந்தை-மகனுக்கு இடையே பணத்தகராறு ஏற்பட்டது.

  இதனால் ஆத்திரமடைந்த ஜெகநாதன், மகனுக்கு வாங்கி கொடுத்த பைக்கை பிடுங்கி கொண்டார். நேற்றிரவு தந்தை-மகனும் மோதிக் கொண்டனர். தந்தையை புருஷோத்தமன் சரமாரியாக அடித்து, உதைத்தார்.

  மேலும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். பலத்த வெட்டு விழுந்ததில் ஜெகநாதன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். புருஷோத்தமன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

  இதையடுத்து, ஜெகநாதன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய புருஷோத்தமனை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×