என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதிய பட்டுச்சேலை
காஞ்சீபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் தங்க ஜரிகையால் உருவான புதிய பட்டுச்சேலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் மத்திய அரசின் காஞ்சீபுரம் நெசவாளர் சேவை மையம் மற்றும் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் இணைந்து நெசவாளர்களுக்கு மானியத்துடன் தறி உபகரணங்கள் வாங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக காஞ்சீபுரம் எம்.பி. கே.மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் நெசவாளர் களால் நெசவு செய்யப்பட்ட காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு சேலைகளை அறிமுகப்படுத்தினார்கள்.
அப்போது ‘தங்கப்பறவை’ என்னும் புதிய பட்டுச்சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இது முழுவதும் தங்கச் ஜரிகையால் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வீ.வள்ளிநாயகம் கூறியதாவது:-
ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் தங்க ஜரிகையால் ஆன ‘தங்க பறவை’ என்ற பட்டு சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.15 கோடி பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை ரூ.4 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழக கைத்தறித்துறை இணை இயக்குநரும் இச்சங்கத்தின் நிர்வாக இயக்குநருமான ஆர்.மோகன்குமார், கைத்தறித் துறை துணை இயக்குநர் டி.பெரியசாமி, நெசவாளர் சேவை மைய துணை இயக்கு நர் டி.கார்த்திகேயன், உதவி இயக்குநர் சசிகலா, வரதராஜன், மாநில கோ-ஆப்டெக்ஸ் துணைத் தலைவரும், இச்சங்கத்தின் துணைத் தலைவருமான எஸ்.ஜெயந்தி சோமசுந்தரம், முருகன் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் ஏ.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story