என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி பகுதிகளில் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கண்டமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல்(32). இவர் கடந்த 11-ம் தேதியன்று சென்னை செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது குண்டவெளியை சேர்ந்த ராஜசேகர்(51) என்பவர் மிரட்டி அவர் பையில் இருந்த ரூ.2ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குபதிந்து ராஜசேகரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராஜசேகர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், அரியலூர் மாவட்ட எஸ்.பி. அணில்குமார் கிரி ஆகியோர் பறிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர்(பொ) தனசேகரன் ராஜசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Next Story