என் மலர்

  செய்திகள்

  உடன்குடி பகுதியில் இடி - மின்னலுடன் பலத்த மழை
  X

  உடன்குடி பகுதியில் இடி - மின்னலுடன் பலத்த மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடன்குடி பகுதியில் சுமார் 1 மணி நேரம் இடி - மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
  உடன்குடி:

  உடன்குடியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் தவித்து வந்தனர்.

  இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

  இதனால் உடன்குடி மெயின் பஜார் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மழை நீர் வடிந்து செல்ல வடிகால் இல்லாததால் தண்ணீர் குளம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலைகளில் செல்ல மிகுந்த சிரமப்பட்டனர்.

  எனவே மழைக்காலம் தொடங்கும் முன் பஜாரில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×