என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் நிழற்குடை அமைக்க கனிமொழி எம்.பி. ரூ.5 லட்சம் நிதி
    X

    சீர்காழியில் நிழற்குடை அமைக்க கனிமொழி எம்.பி. ரூ.5 லட்சம் நிதி

    சீர்காழியில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந் நிலையில் நிழற்குடை அமைக்க கனிமொழி எம்.பி. ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி திருமுல்லை வாசல் சாலையில் கீழ தென்பாதியில் மகளிர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்து மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் கல்லூரி மாணவிகள், அப்பகுதி பொதுமக்கள் பஸ்சிற்காக காத்திருக்கும் போது வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதிப்பட்டு வந்தனர்.

    இதையொட்டி அப்பகுதி தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன் பஸ் நிலையம் அமைக்க கோரி தி.மு.க பாரளுமன்ற குழு தலைவரும், தி.மு.க மகளிர் அணி செயலாளருமான கனிமொழியிடம் மனு அளித்தார். இதை தொடர்ந்து கனிமொழி எம்.பி. பாராளுமன்ற நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை சீர்காழி திருமுல்லை வாசல் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க ஒதுக்கீடு செய்தார். இதற்கு சீர்காழி நகராட்சி மூலம் நிழற்குடை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×