என் மலர்
செய்திகள்

சாந்தோமில் கார்கள் மோதல்: மாநகராட்சி அதிகாரி படுகாயம்
சாந்தோம் சர்ச் அருகே கார்கள் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த மாநகராட்சி அதிகாரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
திருவான்மியூர்:
பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே இன்று காலை ஒரு காரில் வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். உடனே அவரை பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றனர்.
இதனால் பயந்து போன அவர் காரை வேகமாக ஓட்டி சென்றார். சாந்தோம் சர்ச் அருகே வந்த போது ரோட்டின் குறுக்கே சென்று எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மாநகராட்சி அதிகாரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே பொதுமக்கள் காரை ஓட்டி வந்த வாலிபரை கீழே இறக்கி சரமாரியாக தாக்கினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். படுகாயம் அடைந்த மாநகராட்சி அதிகாரி மற்றும் 3 பேரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாநகராட்சி அதிகாரி மயக்க நிலையில் இருந்ததால் அவரது பெயர் விவரம் தெரியவில்லை.

Next Story