என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பண்ருட்டி அருகே ஏரிக்கரையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை காலணியை சேர்ந்தவர் சந்திரசாமி(48) தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த சந்திரசாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவனையில் சேர்க்கப்பட்ட சந்திரசாமி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இது குறித்து இவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story






