என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே வீடுகளில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    பரமத்திவேலூர் அருகே வீடுகளில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    பரமத்திவேலூர் அருகே வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் - கபிலர் மலை செல்லும் வழியில் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 37).

    இவரது மனைவி யுவராணி. இந்த நிலையில் பிரேம்குமார் மனைவியுடன் நேற்று வீட்டை பூட்டிவிட்டு பாண்டமங்கலத்தில் உள்ள தனது தந்தை ஜெயபால் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை மீண்டும் வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் பணம், வெள்ளிபொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    இதுபோல் பரமத்தி வேலூர் குப்புச்சிபாளையம் விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 39).

    இவர் நேற்று தனது பூட்டை விட்டு இரவு தந்தை வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். இன்று காலை வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனிவேல் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×