என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் மாயம்
    X

    வேதாரண்யம் அருகே மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் மாயம்

    வேதாரண்யம் அருகே மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் இருந்து சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் வெள்ளப் பள்ளம் வானவன்மகாதேவி கோடியக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    இந்நிலையில் ஆறுகாட்டுத் துறையிலிருந்து நேற்று காலை சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த மணி(20) ராமன் (43) செல்வம்(40) குமரன்(28) குணசீலன்(38) ஆகிய 5 பேரும் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று காலை திரும்பி இருக்க வேண்டும்.

     
    ஆனால் இதுவரை கரை திரும்பவில்லை. காற்று பலமாக வீசியதால் படகு கவிழ்ந்ததா? அல்லது திசை மாறி சென்றறார்களா என்று தெரியமால் உறவினர்கள் பதற்றமடைந்நுள்ளனர்.

    மாயமான 5 மீனவர்களையும் தேடும் பணியில் சக மீனவர்கள் 6 படகில் கடலுக்குள் சென்றுள்ளனர். 5 மீனவர்கள் மாயமானது ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் மிகுந்த சோகத்தை பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×