என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் தற்போது சூறை காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் தற்போது சூறை காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது. தாழ்வான பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன் பள்ளி, கடினவயல், தென்னடார் ஆகிய இடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
கடல் சீற்றம் மற்றும் சூறை காற்று காரணமாக இன்று 3-வது நாளாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
ஒரு சில மீனவர்கள் தான் சென்று உள்ளனர். அவர்களும் குறைந்த அளவு மீன்களையே பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
Next Story






