என் மலர்

  செய்திகள்

  போடி அருகே மாணவியை கடத்திய வாலிபர் கைது
  X

  போடி அருகே மாணவியை கடத்திய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போடி அருகே பிளஸ்-1 மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  தேனி:

  போடி முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகள் யோகராணி (வயது 17). மாரிச்சாமி இறந்து விட்டதால் யோகராணி அவரது தாய் பூபதி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த யோகராணி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இது குறித்து பூபதி போடி டவுன் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் சிவமணி (22) என்பவர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் அவர்களை மீட்டனர். சிவமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×