என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அரசு கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டம்: கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அதிக ‘மவுசு’
By
மாலை மலர்8 May 2017 10:30 AM GMT (Updated: 8 May 2017 10:30 AM GMT)

பிளஸ்-2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களிடையே தொழில் படிப்புகளை விட கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு தற்போது ‘மவுசு’ அதிகரித்து வருகிறது.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். தொழில் படிப்புகளை விட கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கடந்த சில வருடங்களாக ‘மவுசு’ அதிகரித்து வருகிறது. பி.காம், பி.பி.ஏ, பி.ஏ. ஆங்கிலம், பி.சி.ஏ. கம்யூட்டர் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவ -மாணவிகள் அதிகளவு சேர்ந்து வருகிறார்கள்.
இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்கிறது. பல லட்சம் செலவு செய்து என்ஜீனியரிங் படித்து வேலையில்லாமல் இருப்பதற்கு மாறாக குறைந்த செலவில் பட்ட படிப்புகளை படித்து போட்டி தேர்வுகளை எழுதி எளிதில் அரசு பணிக்கு செல்லலாம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் காணப்படுகிறது.
அதனால் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 82 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. 162 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் 200-க்கும் மேலான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளிவருவதால் கடந்த 1-ந் தேதியே பல கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகம் தொடங்கிவிட்டன.
சென்னையில் லயோலா, எத்திராஜ், கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, ஸ்டெல்லா மேரி கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி (எம்.சி.சி.), உள்ளிட்ட பல கல்லூரிகளில் பி.காம், பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ. உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவ -மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு கலைக் கல்லூரிகளை ஏழை -எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி, வங்கி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம், ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பிற்கும் ஏதாவது ஒரு பட்ட படிப்பு அவசியம் என்பதால் கலை கல்லூரிகளில் கூட்டம் அலை மோதுகிறது. அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த வாரம் விண்ணப்பம் வினியோகம் தொடங்கி விட்டது.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறியதாவது:-
அரசு. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்படும்.
கடந்த ஆண்டுகளை போலவே இந்த வருடம் கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர் இடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. அரசு கல்லூரிகளில் அதிகளவு விண்ணப்பம் பெறும் சூழ்நிலையில் கூடுதலாக இடங்கள் ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
பி.காம், பி.ஏ, ஆங்கிலம், பி.பி.ஏ. பாடங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.

Next Story
×