என் மலர்

    செய்திகள்

    திருவாரூரில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
    X

    திருவாரூரில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவாரூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூரை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் மனைவி சண்முகசுந்தரி (வயது 26). இவருக்கு கடந்த 16-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவரை திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரி சோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது.

    இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். பலியான சண்முகசுந்தரிக்கு 6 மாத குழந்தை ஒன்று உள்ளது.

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×