search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளியை முன்னிட்டு  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரம் போலீசார்
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் சாலையில் பல்வேறு பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களின் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரம் போலீசார்

    • கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது‌.
    • போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 11 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் 96 குழுவினர் இரவு நேர வாகன ரோந்து பணிகள் ஈடுபட்டு குற்ற செயல்கள் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும் சமயத்தில் அந்தந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் பின்னர் செல்ல வேண்டும். கடலூர் மாவட்ட எல்லை பகுதியில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் போன்றவற்றை கடத்துவதை தடுப்பதற்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×