என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தஞ்சையில் வெவ்வேறு விபத்துக்களில் 2 வாலிபர்கள் பலி
  X

  தஞ்சையில் வெவ்வேறு விபத்துக்களில் 2 வாலிபர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.‌
  • பஸ்ஸின் பக்கவாட்டில் சந்தோஷ் மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராதவிதமாக மோதினார்.

  தஞ்சாவூா்:

  தஞ்சையில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துக்களில் 2 வாலிபர்கள் பலியாகினர். அதன் விவரம் வருமாறு :-

  தஞ்சாவூர் பட்டுக்கோ ட்டை புறவழி சாலை முத்தோஜியப்பாசாவடி கம்பி பாலம் பகுதியை சேர்ந்தவர் உதயநிதி (வயது 22).

  இவர் நேற்று இரவு வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் . சிறிது தூரம் சென்றபோது பாலத்தில் எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

  கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

  இதில் தூக்கி வீசப்பட்ட உதயநிதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இதேபோல் தஞ்சை அடுத்த குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27 ).

  இவர் தஞ்சை மாரியம்மன் கோவில் ஆர்ச் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.

  அப்போது நாகையிலிருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

  அந்த பஸ்ஸின் பக்கவாட்டில் சந்தோஷ் மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராத விதமாக மோதினார்.

  இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது .

  இதில் உடல் நசுங்கி சந்தோஷ் பலத்த காயம் அடைந்தார்.

  அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

  இந்த 2 விபத்துக்கள் குறித்தும் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

  அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×