என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பட்டிவீரன்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை
- பட்டிவீரன்பட்டி அருகில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- மதிப்பெண் குறைவாக பெற்றதால் அவர் தற்கொலை செய்து கொணடதாக விசாரணையில் தெரியவந்தது.
வத்தலக்குண்டு:
பட்டிவீரன்பட்டி அருகில் உள்ள அ.புதூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகள் தர்ஷிணி (வயது 17). பிளஸ் 2 மாணவியான இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்ததாகவும் இதனால் கவலையில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
Next Story






