என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலிஷ் போடுவதாக கூறிமூதாட்டியிடம் நகை பறித்த பீகாரை சேர்ந்த 2 பேர் கைது
    X

    பாலிஷ் போடுவதாக கூறிமூதாட்டியிடம் நகை பறித்த பீகாரை சேர்ந்த 2 பேர் கைது

    • தங்க நகைக்கு பாலிஷ் போட்டு புதுப்பித்து தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி, அவர் வைத்திருந்த தங்க நகைகளை பறித்து சென்றனர்.
    • இது குறித்து பெருமாயி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி கக்கன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாயி (வயது 75). கடந்த 31-ந் தேதி, மூதாட்டியின் வீட்டிற்கு வந்த இரு வாலிபர்கள், தங்க நகைக்கு பாலிஷ் போட்டு புதுப்பித்து தருவதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி, அவர் வைத்திருந்த தங்க நகைகளை பறித்து சென்றனர்.

    இது குறித்து பெருமாயி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் இருவர், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் முகாமிட்டிருந்த, பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர்லால் (34). பூரணி மாவட்டத்தைச் சேர்ந்த பிபின்குமார் (30) ஆகிய இருவரையும் காரிப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    நூதன மோசடியில் ஈடுபட்ட பீகார் வாலிபர்களை 5 நாட்களில் கைது செய்த காரிப்பட்டி போலீசாருக்கு, வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×