என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொடைக்கானலில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
- போலீசார் ஆனந்தகிரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன், சப்-இன்ஸ்ர்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் ஆனந்தகிரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆனந்தகிரி 4வது தெரு ஓம் சக்தி கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களிடம் சோதனையிட்டபோது மறைத்து வைத்திருந்த 1.50 கிலோ கஞ்சா மற்றும் 100கிராம் போதை காளான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்களை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இந்திராநகரை சேர்ந்த ஆனந்தகுமார் (25), ஆனந்தகிரி 1-வது தெருவை சேர்ந்த ஜாபர்சாதிக் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






