என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஒட்டன்சத்திரம் அருகே ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது
  X

  கைப்பற்றப்பட்ட அரிசி மற்றும் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

  ஒட்டன்சத்திரம் அருகே ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒட்டன்சத்திரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • சரக்கு வேனில் ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

  ஒட்டன்சத்திரம் :

  ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையகோட்டை போலீசார் வலையபட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். '

  அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.

  அதில் சுமார் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் வேனை ஓட்டி வந்த பள்ளப்பட்டியை சேர்ந்த பக்ரீன்மைதீன் மகன் முகமது இஸ்மாயில் (வயது30) மற்றும் அப்துல்லா மகன் இப்ராகிம் (36) ஆகியோர் இதனை கடத்தி வந்தது தெரிய வந்தது.

  வேன், ரேசன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தியவர்களையும் கைது செய்தனர். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இந்த ரேசன் அரிசி மூடைகளை எங்கிருந்து கடத்தி வந்தார்கள்? கடத்தலுக்கு உதவிய வேறு நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×