என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
- சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
- கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூ–ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுனர். அப்போது கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையின் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கோத்தகிரி தவிட்டுமேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது54) என்பதும் இவர் அரவேணு பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக பாலன் (வயது64) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.