என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் மது விற்ற 2 பேர் கைது
- மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக தனது கைப்பையில் வைத்திருந்தது தெரிய வந்தது.
- போலீசார் மொத்தம் 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி கெட்டிக்கம்பை பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நிற்பதாக கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேலுக்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்க்கும் பொழுது குண்டடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (43) என்பவர் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக தனது கைப்பையில் வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று ஊனமுற்றோர் காலனி பகுதியில் அஜித் (30) என்பவரிடமிருந்து சுமார் 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்து. அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story