என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
    X
    கோப்புப்படம்.

    நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

    நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகள் துர்காதேவி (வயது 19). நிலக்கோட்டை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று தோட்டத்துக்கு சென்று பூ எடுத்து வருவதாக கூறிச் சென்ற அவர் மாயமானார்.

    அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் விளாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி பாண்டிச் செல்வி (32). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முத்துக்குமார் தனது மனைவியை காணாமல் திடுக்கிட்டார்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×