என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ்கள் மோதிக்கொண்ட காட்சி.
திண்டிவனத்தில் பழுதாகி நின்றிருந்த ஆம்னி பஸ் மீது 2 பஸ்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு
- சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது.
- பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் பைபாஸ் சாலை, நத்தைமேடு என்ற இடத்தில் விழுப்புரதில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது. அப்போது அதன் பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார், காயமடைந்த பொள்ளாச்சியை சேர்ந்த கேமாவதி (வயது 30), சென்னையை சேர்ந்த ரேவதி (23) ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






