என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்துகடைகளில் மது விற்ற 2 பேர் கைது
    X

    சந்துகடைகளில் மது விற்ற 2 பேர் கைது

    • சந்து கடைகளில், மது விற்கப்படுவதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • 2 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காவேரிப்பட்டணம், கே.ஆர்.பி., டேம் சாலை, சாப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சந்து கடைகளில், மது விற்கப்படுவதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். இதில் கே.ஆர்.பி., டேம் சாலை, சாப்பானிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஒரு வீடு மற்றும் கடையில் மது பாட்டில்கள் விற்ற ராஜி (வயது 36), சப்பாணிப்பட்டி சின்னதம்பி (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×