என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தஞ்சையில், பூட்டிய வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
  X

  தஞ்சையில், பூட்டிய வீட்டில் 16 பவுன் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
  • ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை ஏ.வி.பி.அழகம்மாள் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

  இவரது மனைவி அனிதாராஜ் (வயது 31).

  சம்பவத்தன்று அனிதாராஜ் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார்.

  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.

  வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

  இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

  இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×