search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் 14,35,198 வாக்காளர்கள்
    X

    இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட காட்சி.

    நாமக்கல் மாவட்டத்தில் 14,35,198 வாக்காளர்கள்

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவகலத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் இறுதி வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். அதன்படி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,13,085 ஆண், 1,19,375 பெண், மற்றவர்கள் - 6 என மொத்தம் 2,32,466 வாக்காளர்களும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1,19,092 ஆண், 1,25,110 பெண், 30 மற்றவர்கள் என மொத்தம் 2,44,232 வாக்காளர்களும் உள்ளனர்.

    நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,22,835 ஆண், 1,31,964 பெண், 47 மற்றவர்கள் என மொத்தம் 2,54,846 வாக்காளர்களும், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,05,778 ஆண், 1,14,976 பெண், 8 மற்றவர்கள் என மொத்தம் 2,20,762 வாக்காளர்களும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 1,11,712 ஆண், 1,18,421 பெண், 46 மற்றவர்கள் என மொத்தம் 2,30,179 வாக்காளர்களும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,23,193 ஆண், 1,29,465பெண், 55 மற்றவர்கள் என மொத்தம் 2,52,713 வாக்காளர்களும் உள்ளனர்.

    இதன்படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,95,695, பெண் வாக்காளர்கள் 7,39,311, மற்றவர்கள் 192 வாக்காளர்கள் என நிகர வாக்காளர்கள் 14,35,198 பேர் உள்ளனர். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 260, சேந்தமங்கலம் -284, நாமக்கல் -289, பரமத்தி வேலூர்-254, திருச்செங்கோடு- 261 மற்றும் குமாரபாளையம்-279 என மொத்தம் 1627 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 24,090 வாக்காளர்கள் சேரக்கப்பட்டு உள்ளனர். 19,845 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக வழங்கப்பட்டு, இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் வரை தொடர் திருத்த முறை வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற உள்ளது.

    31-12-2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர் 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டுகளில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை கோட்டாட்சியர், வட்டாட்சியர் அல்லது நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம். இணையதளம் முலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 77 சதவீத வாக்காளர்கள் படிவம் 6பி மற்றும் ஓட்டர் ஹெல்ப் லைன் செயலியை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இதுவரை இணைத்துக் கொள்ளாதவர்களும் இந்த செயலியை பயன்படுத்தி இணைக்குமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×