என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 143 மி.மீ. மழை: பள்ளி விடுமுறையை எதிர்பார்த்து ஏமாறும் மாணவர்கள்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 143 மி.மீ. மழை: பள்ளி விடுமுறையை எதிர்பார்த்து ஏமாறும் மாணவர்கள்

    • திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மழைக்கால நோய்களுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை. இருந்த போதும் மழை காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆளாகி வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மழைக்கால நோய்களுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாய பணிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் தொடர்மழை வியாபாரிகளை சிரமப்படுத்தி வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திண்டுக்கல் மாவட்ட த்திற்கு மேலும் சில நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதாலும் காலையில் சாரல்மழை தூருவதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகுமோ என்று மாணவர்கள் ஏமா ற்றம் அடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் நேற்று ஒரேநாளில் 143.40 மி.மீ. மழையளவு பதிவானது. திண்டுக்கல் 33.4, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 24, பழனி 11.5, சத்திரப்பட்டி 22.4, நிலக்கோட்டை 10, வேட சந்தூர் 8.3, காமாட்சிபுரம் 5.6, பிரையண்ட் பூங்கா 20.2 மி.மீ. மழையளவு பதிவானது.

    Next Story
    ×