search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1.37 லட்சம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு
    X

    1.37 லட்சம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு

    • சேலம் மாவட்டத்தில் ஆதார் விபரத்தை ேசகரித்து அதை வாக்கா ளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்த முகாமில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 349 பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து அளித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகு திக்கு உட்பட்ட 3,254 ஓட்டுச்சாவடி மையங்க ளில் ஆதார் விபரத்தை ேசகரித்து அதை வாக்கா ளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்களின் ஓட்டுச்சாவடிக்குட்பட்ட வீடு தோறும் சென்று வாக்காளர்களிடம் படிவம் 6-பி ஐ வழங்கி அவர்களின் சுய விருப்பத்தின்படி பூர்த்தி செய்து, அந்த படிவத்தை திரும்ப பெற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    அதன்படி கெங்கவல்லி தொகுதியில் 9,282, ஆத்தூர் 8,524, ஏற்காடு 13,617, ஓமலூர் 16,825, மேட்டூர் 13,576, எடப்பாடி 15,172, சங்ககிரி 12,189, சேலம் மேற்கு 14,821, சேலம் வடக்கு 9,622, சேலம் தெற்கு 9,952, வீரபாண்டி 13,499 என மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 79 பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விருப்பம் தெரிவித்து, படிவத்தை பூர்த்தி செய்து, வழங்கி உள்ளனர்.

    அதில் அதிகபட்சமாக ஓமலூர் தொகுதி மக்கள், அதிகம் பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். 2-வது இடத்தில் எடப்பாடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 4-ந்தேதி நடந்த முகாமில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 349 பேர் படிவம் 6- பி ஐ பூர்த்தி செய்து அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×