search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் மீட்பாளர்களுக்கான 12 நாட்கள் பயிற்சி தொடக்கம்
    X

    பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்து உபகரணங்களை பார்வையிட்டார்.

    பேரிடர் மீட்பாளர்களுக்கான 12 நாட்கள் பயிற்சி தொடக்கம்

    • முகாமில் பேரிடர் மேலாண்மை பற்றி விளக்கம், பேரிடர் தயார் நிலை, கதிரியக்க அணுசக்தி மற்றும் அவசர காலநிலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
    • தீயணைப்பு துறையினர், பேரிடம் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் பேரிடர் மீட்பாளர்களுக்கான 12 நாட்கள் பயிற்சி ஆத்த மித்ரா திட்டத்தின் கீழ் இன்று முதல்வருகிற 2-ந்தேதிவரை ரெட்கிராஸ் பேரிடர் பயிற்சி அரங்கில் நடைபெறுகிறது.

    முகாமில் பேரிடர் மேலாண்மை பற்றி விளக்கம், பேரிடர் தயார் நிலை, நிலநடுக்கமும், நிலச்சரிவு, வெள்ளம், சுனாமி, ரத்தப்போக்கை கட்டுப்படுத்துதல், தசைக்கட்டு காயங்கள், அடிப்படை உயிர் காக்கும் மருத்துவ சேவை, நோயாளிகளை தூக்குதல் -நகர்த்துதல், பாம்பு கடி விலங்குகள் கடி, கயிறு மூலம் மீட்பு நடவடிக்கை, தீயிலிருந்து பாதுகாத்தல், காட்டுத்தீ, ரசாயன அவசர நிலை, உயிரியல் அவசர நிலை, கதிரியக்க அணுசக்தி மற்றும் அவசர காலநிலை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    முகாமை தொடங்கி வைத்து காட்சிப்படுத்தப்ட்ட உபகரணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். இதில் தீயணைப்பு துறையினர், பேரிடம் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×