என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 102 பேர் பயன்
- தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் கோரிமேட்டில் உள்ள தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவை, காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்பட 25 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி தங்களுக்கு தேவையான தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்தது. 8-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் என 171 பேர் பங்கேற்றனர். இதில் 102 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இந்த தகவலை ேவலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story