என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வடமதுரையில் வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
  X

  கோப்பு படம்

  வடமதுரையில் வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிடையில் இருந்த 10 ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா மல்லபுரம் ஊராட்சி பல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. மேலும் இவர் சொந்தமாக கிடை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு ஆடுகளை அடைத்து வைத்து விட்டு இன்று காலை அதனை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது கிடையில் இருந்த 10 ஆடுகள் இறந்து கிடந்தன. வெறிநாய்கள் அதனை கடித்து ெகான்று சென்றது தெரிய வந்தது.

  கிராமங்களில் இரவு நேரங்களில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் கிடைப்பதில்லை.

  எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×