என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் கருத்தடை ஊசி போடும் சிறப்பு முகாம்
    X

    சேலம் மாவட்டத்தில் கருத்தடை ஊசி போடும் சிறப்பு முகாம்

    • ஒரு குழந்தை பிறந்த பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளி விட்டு தான் அடுத்த குழந்தை பிறக்க வேண்டும்.
    • இந்த மாத்திரையை விட கருத்தடை ஊசியை பயன்படுத்துவதையே சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

    சேலம்:

    தாய்மை அடையும் பெண்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளி விட்டு தான் அடுத்த குழந்தை பிறக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்து பிறக்கும்

    குழந்தைகள் ஆரோக்கிய மாக பிறக்கும். இதற்காக ஒரு குழந்தை பிறந்தவுடன் சிலர் கருத்தடை மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த மாத்திரையை விட கருத்தடை ஊசியை பயன்படுத்துவதையே சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

    இதை அரசும் ஏற்றுக்கொண்டு கருத்தடை ஊசி செலுத்துவதை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் கருத்தடை ஊசி சிறப்பு முகாம்களை குடும்ப நலத்துறை சார்பில் நடத்தி

    வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் பெண்களுக்கு தற்காலிக கருத்தடை ஊசி சிறப்பு முகாம் இன்று தொடங்கி மார்ச் மாதம் முழுவதும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம் சேலம் அரசு மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, 7 தாலுகா மருத்துவமனை உட்பட 10 அரசு மருத்துவமனைகள், மலைப்பகுதியான கரிய கோவிலில் உள்ள மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையம், 87 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம், 35 ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டணமில்லா கருத்தடை ஊசி செலுத்தப்படுகிறது.

    இந்த முகாமை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குடும்ப நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×