என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணத்தில்  கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்
    X

    கடல் சீற்றம் காரணமாக படகுகள் கரையில் ஓய்வு எடுப்பதை படத்தில் காணலாம்.

    மரக்காணத்தில் கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வங்காள விரிகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது.

    விழுப்புரம்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் முடிவு அடைந்த நிலையில் தமிழ கத்தில் பல்வேறு இடங்க ளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்நிலை யில் தற்போது வட தமிழக வங்க கடலில் நாளை காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வங்காள விரிகுடா பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த வங்காள விரிகுடா பகுதியில்19 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு பைபர் படகு உள்ளிட்ட படகுகளில் இந்த பகுதியில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை உருவாக உள்ள நிலையில் மரக்காணம் பகுதிகளில் காலை முதலே கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் அதிகாலையிலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து விட்டு விட்டு தூரல் மழை பெய்து வருகிறது.

    கடல் சீற்றமாக கொந்தளி ப்புடன் காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ள அனைத்து மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் தங்களது படகுகளை கடற்கரை ஓரம் மேடான பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக சில நாட்களாக கனமழை கொட்டியதால் இந்த பகுதி யில் உள்ள உப்பளத்தில் உப்பு உற்பத்தி நடை பெறாமல் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளது குறிப்பிட த்தக்கதாகும். இந்த மழை யால் மீனவர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.

    Next Story
    ×