என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போலீசாரை கண்டித்து திடீர் மறியல் டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை
  X

  மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

  போலீசாரை கண்டித்து திடீர் மறியல் டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் மனைவி மகனுக்கு சேர வேண்டிய சொத்தை, இரண்டாவது மனைவி மகனுக்கு எழுதி வைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
  • 2-வது மனைவியின் மகன் சுகுமார் என்பவரும் சேர்ந்து அடித்து விரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தனசேகரன், கோகிலாமணி இருவரும் புகார் அளித்தனர்.

  ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தனசேகரன், கோகிலாமணி தம்பதியினர். தனசேகரின் தந்தை பழனிசாமிக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி மகனுக்கு சேர வேண்டிய சொத்தை, இரண்டாவது மனைவி மகனுக்கு எழுதி வைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில், மேட்டூரில் வசித்து வந்த தனசேகரன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, மனைவியுடன் வந்து தாசநாயக்கன்பட்டி வீட்டில் வசித்து வருகிறார். இங்கு குடியிருக்கக்கூடாது என்று பழனிசாமியும், 2-வது மனைவியின் மகன் சுகுமார் என்பவரும் சேர்ந்து அடித்து விரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தனசேகரன், கோகிலாமணி இருவரும் புகார் அளித்தனர்.இந்த புகார் குறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் தனசேகரன், கோகிலாமணி இருவரையும் கையையும், கழுத்தையும் பிடித்து வெளியே தள்ளியாதாக கூறப்படுகிறது.

  போலீசாரின் இந்த செயலை கண்டித்து தனசேகரன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் முன்பாகவே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நியாயத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதா குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து அவர்களின் புகார் குறித்தும், போலீசார் வெளியே தள்ளியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, காவல் நிலையத்திற்கு உள்ளேயே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர். அதனால், வெளியே சென்று பேசுங்கள் என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டது. வேறு ஒன்றும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர்.

  Next Story
  ×