search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஏழு லட்சம் யுனிட் விற்பனையை கடந்த ஹோன்டா சிட்டி
    X

    இந்தியாவில் ஏழு லட்சம் யுனிட் விற்பனையை கடந்த ஹோன்டா சிட்டி

    ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹோன்டா சிட்டி இந்தியாவில் இதுவரை ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 1998-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹோன்டா சிட்டி இந்தியாவில் இதுவரை ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நான்காவது தலைமுறை மாடல் விற்பனையாகி வரும் நிலையில் ஹோன்டா சிட்டி சர்வதேச விற்பனையில் இந்திய விற்பனை மட்டும் 25 சதவிகிதமாக இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹோன்டா மாடல் கார் என்ற பெருமையை பெற்றுள்ள ஹோன்டா சிட்டி, இந்தியாவில் ஏழு லட்சம் யுனிட்கள் விற்பனையான முதல் பிரீமியம் செடான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. நான்கு தலைமுறைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வரும் ஹோன்டா சிட்டி வாடிக்கையாளர்கள் விரும்பும் அம்சங்களை வழங்குகிறது. இந்த சாதனையை நிறைவுற செய்த வாடிக்கையாளர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என ஹோன்டா கார்ஸ் இந்திய தலைமை செயல் அதிகாரி யோச்சிரோ யுனோ தெரிவித்தார்.

    மேலும் ஹோன்டா சிட்டி இந்திய சந்தையில் துவக்கம் முதலே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சர்வதேச விற்பனையில் 25 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ் தோற்றம், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், அதிக செயல்திறன், மைலேஜ் மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது. அந்த வகையில் ஹோன்டா சிட்டி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



    உலக சந்தையில் 60க்கும் அதிகமான நாடுகளில் விற்பனையாகி வரும் ஹோன்டா சிட்டி, நான்காம் தலைமுறை மாடல் 36 லட்சம் யுனிட்களை கடந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட CVT பெட்ரோல் வதிகளில் கிடைக்கும் ஹோன்டா சிட்டி செயல்திறன் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றை சீராக வழங்குகிறது.

    ஹோன்டா சிட்டி மாடலில் கீலெஸ் என்ட்ரி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டீரிங் மவுன்டெட் ஆடியோ மற்றும் ப்ளூடூத் ஹேன்ட்ஸ்ஃப்ரீ, மேம்படுத்தப்பட்ட 17.7 சென்டிமீட்டர் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஏர்-கன்டிஷ்னர், லெதர் சீட், 16-இன்ச் டைமண்ட் அலாய் வீல், ABS, EBD மற்றும் ஏர் பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×